தங்கம் விலை தொடர்ந்து சரிவு; 3 நாட்களில் ரூ.2,200 குறைந்தது

சென்னை: தொடர் ஏற்றத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு பவுன் ரூ.67,200க்கு விற்பனையானது. தொடர்ந்து 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.66,480க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ஒரு கிராம் ரூ.8,285க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு பவுன் ரூ.66,280க்கு விற்பனையானது.

3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை தொடர்ந்து சரிவு; 3 நாட்களில் ரூ.2,200 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: