அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு பவுன் ரூ.67,200க்கு விற்பனையானது. தொடர்ந்து 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.66,480க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ஒரு கிராம் ரூ.8,285க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு பவுன் ரூ.66,280க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று மேலும் தங்கத்தின் விலை உயர்வை கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.102க்கும் விற்பனையானது. இந்நிலையில் எந்த மாற்றமுமின்றி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கும், ஒரு கிலோ 1,02,000க்கும் விற்பனையாகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து விற்பனை appeared first on Dinakaran.