டெல்லி: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி; வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுகிறது. 818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ப்படுகிறது. மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயுவை குறைந்த விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.41,338 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தபப்ட்டுள்ளது. சர்வேதேச சந்தையில் எல்பிஜி விலை உயர்ந்து வருவதாகவும், அதற்கேற்ப சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை அமலுக்கு வரும் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் கியாஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய அரசு உயர்த்தியது.
The post வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.