பாரதிராஜா படப்பிடிப்பில் மின்னல் தாக்கியதால் பரபரப்பு

பழநி: பழநி அருகே, இயக்குனர் பாரதிராஜா படப்பிடிப்பில் மின்னல் தாக்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, கணக்கன்பட்டி ஊராட்சியில் கோம்பைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் பாரதிராஜா, அவரது மகன் மனோஜ், அப்புக்குட்டி, ரக்ஷணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நேற்று மாலை கோம்பைப்பட்டி பகுதி மக்காச்சோளம் தோட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய மின்விளக்கு ஒன்றின் மீது மின்னல் தாக்கியது. அதன் அருகில் நின்றிருந்த 5 தொழில்நுட்ப கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

The post பாரதிராஜா படப்பிடிப்பில் மின்னல் தாக்கியதால் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: