மண்டபம், மார்ச் 23: மண்டபம் முதல் ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம், கிராம பகுதிகளில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்க தற்காலிகமாக குடிநீர் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வெயில் மார்ச்,ஏப்ரல், மே,ஜூன் ஆகிய மாதங்கள் வரை அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் வழக்கத்தை விட இந்த வெயிலில் வெளியூர்களுக்கு பயணங்கள் சென்று வரும்போது சோர்வடைந்து உடல் நிலை பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் பொதுமக்களின் உடல்நலன் கருதி மண்டபம் பேரூராட்சி பேருந்து நிறுத்தம் மண்டபம் கேம்ப், மரைக்காயர்பட்டிணம், வேதாளை, எஸ்.மடை, பிரப்பனவலசை, உச்சிப்புளி, பெருங்குளம் ஆகிய பேருந்து நிறுத்தத்திலும், அதுபோல மண்டபம் முதல் ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலை வரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமங்களில் ஊர் பகுதிக்கு நுழையும் பகுதியில் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டிகள் வைக்க வேண்டும். வெயில் காலம் முடியும் வரை தினசரி குடிநீர் தொட்டியை சுத்தமாக சுகாதாரத்துடன் பராமரித்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வெயிலின் தாகத்தை தணிக்க கிராம பகுதியில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.