மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசாரம்

பழநி, மார்ச் 12: பழநி அருகே தாழையூத்து கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. கிளை செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இதில் அமெரிக்க- இஸ்ரேல் நாடுகள் எண்ணெய் வள கொள்ளைக்காக ஈரானுக்கு எதிராக நடத்தும் போரை காரணம் காட்டி ஒன்றிய அரசு இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்த கூடாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு இந்திய நாட்டை ஒன்றிய அரசு அடகு வைக்க கூடாது.

ஒன்றிய அரசு மதவாத வெறுப்பு அரசியலை கைவிட வேண்டுமென வலியுறுத்தியும், ஒன்றிய அரசிற்கு துணை போகும் அதிமுக கூட்டணியை கண்டித்தும் பேசினர். தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், ஒன்றிய செயலாளர் கனகு ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை, நாதன், மயில்சாமி, பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: