மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் ஆதரவற்ற 18 பேர் மீட்பு

மதுரை, மார்ச் 12: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் தவித்த 18 பேர் மீட்கப்பட்டு, மாநகராட்சி, தனியார் காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர். மதுரையில் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாக ஒத்துழைப்புடன், ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வளிக்கும் ‘ஸ்மைல்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் தலைமையிலான குழுவினர், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதில் யாசகர்கள், ஆதரவற்ற முதியோர், மனம் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட 18 பேர் கண்டறியப்பட்டனர்.

பின்னர் போலீசார் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, மாநகராட்சியின் ரோஜாவனம் இல்லம், சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் ஆகியவற்றின் பணியாளர்கள் உதவியுடன் காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 3 ஆண்கள் உள்ளிட்ட 7 பேர், மாநகராட்சி ரோஜாவனம் இல்லத்திலும், 11 ஆண்கள் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்திலும் மறுவாழ்வு பராமரிப்பிற்கென சேர்க்கப்பட்டனர். ,இந்த மீட்பு பணிக்கான ஆம்புலன்ஸ் உதவிகள் நேதாஜி டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories: