க.புதுப்பட்டியில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள உத்தரவு

தேனி, மார்ச் 12: தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், கடந்த 4ம் தேதி தேனி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், க.புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 14வது மற்றும் 15வது வார்டுகளில் சுகாதாரக்கேடு, குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் நீர் தேங்குதல் மூலம் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் க.புதுப்பட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தேனியில் உள்ள மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ரஜினி, க.புதுப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் 14 மற்றும் 15வது வார்டுகளில் அடிப்படை பணிகளை மேற்கொண்டு, ஆவணப்படுத்தி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என க.புதுப்பட்டி பேரூராட்சி செயல்அலுவலருக்கு மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி உத்தரவிட்டார்.

Related Stories: