பொது இடங்களில் உள்ள திமுக கொடி கம்பங்களை அகற்ற வேண்டுகோள்

ஊட்டி, மார்ச் 23: பொது இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற மாவட்ட பொறுப்பாளர் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை ஏற்று, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்றி அதன் விவரங்களை திமுக தலைமைக்கு தெரிவித்திட வேண்டும் என கடந்த 20ம் தேதி திமுக பொதுச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் பொது இடங்களில் அமைந்துள்ள கட்சி கொடிக்கம்பங்களை உடனே அகற்றி அதன் விவரங்களை மாவட்ட அலுவலகத்தில் வரும் மார்ச் 30ம் தேதிக்குள் தெரிவித்திட சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கே.எம்.ராஜு கூறியுள்ளார்.

The post பொது இடங்களில் உள்ள திமுக கொடி கம்பங்களை அகற்ற வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: