பந்தலூர், மார்ச் 15: பந்தலூர் அருகே கூவமூலா செட்டிவயல் பகுதியில் வசிக்கும் ராஜகோபால் என்பவரின் விட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தேவாலா வனச்சரகம் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பினை லாவகமாக பிடித்தனர். வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் படி கடும் விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
The post வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு மீட்பு appeared first on Dinakaran.