ஊட்டி, மார்ச் 19: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் சேதமடைந்த புற்கள் அகற்றப்பட்டு புதிதாக புற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவ கூடிய இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ேராஜா பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயராகி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ புல் மைதானங்கள் உள்ளன. இவை சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வந்ததில் சில இடங்களில் சேதமடைந்துள்ளன. கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் சேதமடைந்த புற்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வேறு இடங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்படும் புற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல் மைதானங்கள் சீரமைப்பு தீவிரம் appeared first on Dinakaran.