கூடலூர் மார்ச் 24: கூடலூர் வைர மகள் மகளிர் அமைப்பு சார்பில் மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கூடலூரில் நேற்று நடைபெற்றது. கூடலூரில் மகளிருக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் தொல்லைகளை கண்டறிந்து அவற்றை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.
கூடலூர் மைசூர் சாலை மார்த்தோமா நகரில் துவங்கி கூடலூர் செயிண்ட் தாமஸ் பள்ளி வரை நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார், நகர்மன்ற தலைவர் பரிமளா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டப்போட்டியை தூக்கி வைத்தனர்.
வைர மகள் அமைப்பின் நிர்வாகிகள் சுஜாதா, கிரிஜா, ஜானகி, மும்தாஜ், ராஜேஸ்வரி, சாரா, சுலேக், வவின், சுந்தரவல்லி, தமிழ்ச்செல்வி மற்றும் குழுவினர் நிகழ்ச்சிக ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து, சன் தாமஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post மகளிர் தினம் முன்னிட்டு கூடலூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் appeared first on Dinakaran.