அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால ஆடை பெட்டகம்

கூடலூர், மார்ச் 23: கூடலூர் வண்டிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில்ட்ரன் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு காலத்தில் பயன்படுத்தக்கூடிய உடைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுஜித் கண்ணா முன்னிலை வகித்தார். ஆரம்ப சுகாதார மருத்துவர் கெளதம் தலைமை தாங்கினார். கூடலூர் நகர் மன்ற உறுப்பினர் கௌசல்யா பயனாளிகளுக்கு பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் 60 கர்ப்பிணிகளுக்கு ஆடை பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் பிரசவ காலங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

The post அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால ஆடை பெட்டகம் appeared first on Dinakaran.

Related Stories: