கூடலூர் வனக்கோட்டத்தில் நில வாழ் பறவைகள் நாளை கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

பந்தலூர், மார்ச் 15 : கூடலூர் வனக்கோட்டத்தில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நாளை (16ம் தேதி) நடைபெறவுள்ளது.  கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:  தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 2025 -ம் ஆண்டு நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நாளை 16 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூடலூர் வனக்கோட்டம் சார்பில் நாளை (16ம் தேதி) நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு 25 இடங்களில் நடைபெற உள்ளது.  விருப்பமும் ஆர்வமும் உள்ள தன்னார்வலர்கள் உயிரியலாளர் கார்த்திகா 98942 65973 என்னும் அலைபேசியில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். பங்கேற்கும் அனைவருக்கும் வனத்துறை சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

The post கூடலூர் வனக்கோட்டத்தில் நில வாழ் பறவைகள் நாளை கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: