இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது

சூலூர், மார்ச் 21: கோவை மாவட்டம் சூலூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் சீனிவாசன். இவர், கரையான்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுவனத்தில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது.இதையடுத்து, சீனிவாசன் மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் அப்பகுதியில் வாகனத்தை நடத்தினர். அப்போது கரையான் பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கருப்பசாமி (39), கிஷோர் (24) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், மதுரையை சேர்ந்த பெயிண்டர்களான கருப்பசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சீனிவாசனின் வாகனத்தை திருடியது தெரியவந்தது. உடனடியாக, சீனிவாசன் தனது உடன் பணிபுரிபவர்களான வேலுமணி மற்றும் மதன் ஆகியோரின் உதவியுடன் கருப்பசாமி மற்றும் கிஷோர் இருவரையும் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

The post இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: