போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோத்தகிரி, மார்ச் 21: கோத்தகிரி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிமாயார் பழங்குடியினர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லி மாயார் பழங்குடியினர் கிராமத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு மற்றும் நெகிழியை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் ஆகியவை ஆதி நிலம் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் அனைவருக்கும் போதையை தவிர்த்து வாழ்க்கையில் உயர்வாக வாழவும், நெகிழியை ஒழித்து இயற்கை மற்றும் வன உயிரினங்களை வாழ வழி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்திற்காக போதை ஒழிப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதி நிலம் அமைப்பை சேர்ந்த வீரப்பன், கருப்புசாமி, பிரியங்கா, தமிழரசன், நாகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக அப்பகுதியில் வனப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் அல்லிமாயார் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

The post போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: