கூட்டுறவுத்துறை சார்பில் முக்கட்டி பகுதியில் உர விற்பனை நிலையம் திறப்பு

பந்தலூர், மார்ச் 19 : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முக்கட்டி பகுதியில் கூட்டுறவு துறை சார்பில் புதிய உர விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. பந்தலூர் அருகே நெல்லியாளம், மூனநாடு, குந்தலாடி, உப்பட்டி , பாக்கனா, பிதர்காடு, பாட்டவயல், அம்பல மூலா, நெலாக்கோட்டை, முதிரக்கொல்லி,பெரும்பள்ளி, சோலாடி, விளங்கூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கட்டி பகுதியில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் புதிய உர விற்பனை நிலையத்தை நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன் நேற்று திறந்து வைத்தார். விவசாயத்திற்கு தேவைப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாய கருவிகள் விற்பனை செய்யப்படும் எனவும் இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மண்டல இணை பதிவாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் முத்துகுமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கார்த்திகேயன், நிசார் மற்றும் சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post கூட்டுறவுத்துறை சார்பில் முக்கட்டி பகுதியில் உர விற்பனை நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: