பாலக்காடு, மார்ச் 24: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சேர்ப்பு அருகே பாரளம் பகுதியில் நேற்று முன்தினம் நுரை மழை பெய்தது. இந்த சம்பவம் இப்பகுதியில் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் கோடை சீசனில் மழை பெய்வதுண்டு. சில சமயங்களில் ஆலிப்பழம் என்ற பெயரில் ஐஸ் கட்டி மழை பெய்யும். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பாரளம் கிராமப்பஞ்சாயத்து உட்பட்ட அம்மாடம், கோடணூர் ஆகிய இடங்களில் நுரை மழை பெய்துள்ளது.
அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நுரை உருவாகி விட்டனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சில கால கட்டங்களில் காலநிலை மாற்றத்தில் இதுபோன்று நுரை மழை பெய்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற புகையும், மரங்களிலிருந்து வெளியேறும் ஆவியும், கோடை மழையும் கவர்ந்த நிலையில் நுரை மழை பெய்யக்கூடும் எனவும், இதனால் எந்தவிதமான அபாயமும் மக்களுக்கு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
The post பாரளம் பகுதியில் நுரை மழை பெய்ததால் மக்கள் ஆச்சரியம் appeared first on Dinakaran.