திருமலை: சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட 25 பேர் மீது தெலங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாட்டில் நாள்தோறும் சைபர் மோசடி, ஆன்லைன் சூதாட்டம், அதிக வட்டி ஆசை போன்ற பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மொபைல் செயலி சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று திரைப்பட நடிகர், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விளம்பரம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், மன்ச்சுலட்சுமி, நிதி அகர்வால் உள்பட 25 நடிகர்கள் மற்றும் சிலர் மீது தெலங்கானா மாநிலம், மியாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய 25 நடிகர், நடிகைகள் மீது வழக்கு appeared first on Dinakaran.