புதுடெல்லி: அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த வடகிழக்கு இந்தியா விழாவில் கலந்து கொண்டபோது மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மாநில அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டபோதும், தேஜ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஷம்புநாத் சிங் உள்ளிட்ட சில அதிகாரிகள் ஜூபின் கார்க்குக்கு மரியாதை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதைகண்டித்து மாணவர்களும், ஆசிரியர்களும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட அவரை பதவி நீக்கம் செய்ய கோரியும் போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில் தேஜ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஷம்புநாத் சிங்கை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மணிப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.லோகேந்திர சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
