புதுடெல்லி: பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் பரீட்ஷா பே சர்ச்சா என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 9 வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. MyGov இணையதளம் மூலம் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
