புதுடெல்லி: ஜவுளி நிறுவனம் தொடர்பான பணமோசடி வழக்கில், லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஜவுளி நிறுவனமான எஸ் குமார்ஸ் நேஷன்வைட் லிமிடெட் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் நிதின் கஸ்லிவால் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பை ரூ.1400 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நிதின் கஸ்லிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள சுமார் ரூ.150கோடி மதிப்புள்ள அசையா சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த சொத்தானது நிதின் ஷம்பு குமார் கஸ்லிவால் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பயனாளி உரிமையின் கீழ் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
