புதுடெல்லி: டிசம்பர் மாதம் ரூ. 1,74,550 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம். 2024 டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது. கடந்த செப்டம்பர் 22 முதல், சுமார் 375 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அதன்பின் வருவாய் மெதுவான வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
