பாடாலூர், மார்ச் 12: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராம த்தில் செல்வ விநாயகர், பிரகதாம்பாள், சமேத பிரகதீஸ்வரர், தேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோயில்கள் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக கடந்த 8ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பிரகதாம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.சிவாச்சாரியர்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பிலிமிசை பிரகதாம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு appeared first on Dinakaran.