இந்த மழை பலத்த மழையாக பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சிதம்பரம் அண்ணாமலை நகர், சிவபுரி, வல்லம்படுகை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இப்பகுதியில் கடும் வெயில் தாக்கம் காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதேபோல் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வந்தது.
இந்நிலையில் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பொதுமக்கள் மழையில் நனைந்தபடி குடை பிடித்துக் கொண்டும் கடை வீதிக்கு வந்து சென்றனர். அதேபோல் நடராஜர் கோயிலுக்கு வெளியூர், வெளிமாவட்டம், மாநிலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கார், வேன் ,பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிக வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையில் நனைந்தபடி கோயிலுக்கு சென்று வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இப்பகுதியில் கடும் வெயில் தாக்கம் மற்றும் அனல் காற்று வீசி வந்த நிலையில், இன்று காலையில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post கடலூர், சிதம்பரம் வட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
