மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகும் “காட்டேஜ்”

எவல்யூஷன் என்டர்டெயின்மென்ட், புளூபெர்ரி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘காட்டேஜ்’. சதீஷ் கீதா குமார், நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்குகின்றனர். நவீன் முரளிதர், ஆரியா செல்வராஜ், கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி நடிக்கின்றனர். சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார்.

செந்தமிழ் இசை அமைக்க, கு.கார்த்திக் பாடல்கள் எழுதுகிறார். ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாகப் பின்தொடரும் ஒரு மனிதன், அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக இப்படம் உருவாகிறது. ஊட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது.

The post மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகும் “காட்டேஜ்” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: