சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா’ கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் – கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் – புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 17ம் தேதி (நாளை) வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி மெரினா கடற்கரை, கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு: அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.