நீண்ட வரிசையில் ஒருமணிநேரம் காத்திருப்பு; எல்.பி.ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி: வாழ்தாரம் பாதிக்கும் என அச்சம்

சென்னை: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. அத்துடன் ஆட்டோக்களுக்கு நிரப்படும் எல்.பி.ஜி எரிவாயுவிற்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில எல்.பி.ஜி காஸ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எல்.பி.ஜி ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் வரை செல்லக்கூடிய சி.டி.எச் சாலையில் அமைந்துள்ள காஸ் நிலையம் ஒன்றில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது உள்ள காஸ் தீர்ந்து விட்டால் வாழ்தாரமே கேள்விக்குறியாகிவிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஓட்டுநர்கள் ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். தட்டுப்பாடு தொடர்ந்தால் ஆட்டோ சேவை முடங்கி, நிலைமை மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: