விளாத்திகுளம், ஜன. 9: புதூர் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், புதூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதூர் வட்டார செயலாளர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். பொருளாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
The post புதூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.