வேதாரண்யம், ஜன. 7: வேதாரண்யம் தாலுக்கா மருதூரில் புதிய மண் மாற்றி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டது. நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, வேதாரண்யம் வட்டம் -மருதூர் தெற்கு ஊராட்சி பூவதேவன்காடு பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாய்மேடு சார்பில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் குறைந்தமின் அழுத்தத்தை போக்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம்முருகையன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்சார வாரிய ஊழியர்கள் கிராம மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post 229 மனுக்கள் பெறப்பட்டது வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கில் புதிய மின்மாற்றி இயக்கம் appeared first on Dinakaran.