அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி போராட்டம்

ராமேஸ்வரம்,ஜன.7: அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியை நகராட்சி நிர்வாகம் முறையாக தூய்மை செய்ய வில்லை. மேலும் அசுத்தமாக வைத்திருப்பதை கண்டித்து நேற்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில் தலைமையிலும் கருணாமூர்த்தி முன்னிலையிலும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மகளிர்கள் மற்றும் தோழர்கள் கையில் துடைப்பத்தை ஏந்தியபடி கோஷமிட்டபடி கடற்கரையில் பேரணி சென்றனர். பக்தர்கள் புனித நீராடும் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதை நகராட்சி நிர்வாகம் உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்டச் செயலாளர் சிவாஜி, தலைவர்கள் சுடலைக்காசி, ராமச்சந்திர பாபு, ஜனநாயக மாதர் சங்க தாலுகா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: