பெங்களூருவில் விமான கண்காட்சி பிப்.10-ல் தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்

கர்நாடகா: இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூரு 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியை நடத்தி வருகிறது. ஐந்து நாள் ஏரோ இந்தியா 2025 நிகழ்வு பிப்ரவரி 10 முதல் 14 வரை இந்திய விமானப்படையின் (IAF) யெலஹங்கா விமான தளத்தில் நடைபெறும்

பெங்களூரு நகரம் தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டுமே பெயர் பெற்ற நகரம் அல்ல. விண்வெளி, ராணுவம், கல்வி இப்படி பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், 1996 முதல் பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், ராணுவம் சார்பில், சர்வதேச விண்வெளி கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்பின், 1998, 2001, 2003, 2005, 2007, 2009, 2011, 2013, 2015, 2017, 2019, 2021, 2023 என இதுவரை 14 முறை, ‘ஏரோ இந்தியா’ எனும் சர்வதேச விமான கண்காட்சி நடந்துள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கும் விமான கண்காட்சி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என்று இரண்டு முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன. இந்தக் கண்காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவ அதிகாரிகள் செய்து வருகிறார்கள்

ஏரோ இந்தியா என்பது ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறை, இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), விண்வெளித் துறை மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உட்பட பல முகவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .

முதல் நாளில், அலுவலக நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், வணிக ஒப்பந்தங்கள் நடக்கும். பிப்., 11, 12 ஆகிய இரு நாட்கள் வணிகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கும். பிப்., 13, 14ல் பொது மக்கள் விமான கண்காட்சி ஸ்டால்களை பார்க்கலாம். டிக்கெட் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு, https://www.aeroindia.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். கடந்தாண்டு, 80 நாடுகள் கண்காட்சியில் பங்கேற்றன. 100 சர்வதேச மற்றும் 700 உள்நாட்டு நிறுவன ஸ்டால்கள் இடம்பெற்றன

 

The post பெங்களூருவில் விமான கண்காட்சி பிப்.10-ல் தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: