2017 முதல் 2022 வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட நிதியின் மொத்த தொகை ₹1074 கோடி. 2017 முதல் 2020 வரை தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹22.94 கோடி. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை தலா ₹3 கோடி. 2021-22ல் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹11.86 கோடி. ஆனால், சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ₹198.83 கோடி. ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியையும், மற்ற இந்திய மொழிகளுக்கு மிகமிக குறைவான நிதியையும் ஒதுக்கி பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் மொழியைப் பற்றி பிரதமர் மோடி மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசியது தமிழர்களை ஏமாற்றுகிற அரசியல் மோசடியாகும். பிரதமர் மோடி, எத்தனை முறை இத்தகைய பாசாங்கு நாடகங்களை நடத்தினாலும் அவர் விரிக்கிற மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ் மொழி பற்றி மோடியின் பேச்சு; தமிழர்களை ஏமாற்றுகிற அரசியல் மோசடி: செல்வப்பெருந்தகை தாக்கு appeared first on Dinakaran.