சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் வந்தால் திமுக அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்நிலையில், வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதற்காக, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை செய்து வருகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை செய்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் 3 அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
எம்.எம்.அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, டாக்டர் எழிலன், தமிழரசி, டி.கே.எஸ். இளங்கோவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், சுரேஷ் சம்பந்தம் பங்கேற்றுள்ளனர்.
