சென்னை: அப்போலோவில் சேர்க்கப்பட்ட தமிழ்மகன் உசேன், தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதிமுக அவைத்தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன், உடல்நலக்குறைவால் கடந்த 16ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கம், பி.எச். சாலையில் உள்ள அப்போலோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது குணமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் குணமடைந்து வருகிறார்
- அஇஅதிமுக
- ஜனாதிபதி
- தமிழ்மாகன் ஹுசைன்
- சென்னை
- மகன் ஹுசைன்
- அப்பல்லோ
- அ.தமிழ் மகன் ஹுசைன்
- அப்பல்லோ மருத்துவமனைகள்
- 16வது
- கிளிப்பூக், சென்னை
- பிஹெச் சாலை…
