சாதியை பார்த்து போடும் தீட்டு ஓட்டு வேண்டாம்: சீமான் பேட்டி

திருச்சி: வேட்பாளரின் சாதியை பார்த்து போடும் தீட்டு ஓட்டு நாதகவுக்கு தேவையில்லை, தோற்றால் பரவாயில்லை என சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நாதக மகளிர் பாசறை கூட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: பெண்மையை போற்றாத எந்த சமூகமும் மேம்பட்டது அல்ல. பெண் விடுதலை இல்லை என்றால் மண் விடுதலை இல்லை என்பதை கருத்தில் கொண்டு பெண்களை அரசியல் களத்தில் நாங்கள் இறக்கியுள்ளோம். எங்கள் பாட்டன் பாரதி பெண்களை நெருப்பாக்கினார். எங்கள் தலைவர் பிரபாகரன், பெண்களை புலியாக்கினார். அவர் மகன் நான் வந்தேன். பெண்களை அரசியல் களத்தில் புரட்சித் தீ ஆக்கினேன். தமிழ் தேசிய அரசியல் கிடைக்க வேண்டுமென்றால் சாதி இருக்கக்கூடாது. வேட்பாளரின் சாதியை பார்த்து போடும் தீட்டு ஓட்டு நாதகவுக்கு தேவையில்லை. நிறம், சாதி, மத அரசியல் வேண்டாம். கருத்து கோட்பாடு அரசியல் வேண்டும். சாதியால் சாதித்தவர் இல்லை. ஒரே சாதியினர் என்றும் வென்றது இல்லை. மானம், மொழி, தமிழ் குடிமக்கள் காக்க நாம் போராடுகிறோம். தோற்றால் பரவாயில்லை. நல்லவர்கள் தோல்வியால் தான் உருவாக்கப்படுவார்கள். பாஜவை வீழ்த்த ஒரு குழு சேர வேண்டும். அதற்கு நம்மை அழைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: