கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் பரிதாப பலி

ஜால்னா: ஜால்னா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் பரிதாப உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டம் நாலாசோபாரா பகுதியை சேர்ந்தவர் விஜய் படேல்(30). இவர் ஜால்னா மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது காலை 11.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவருக்கு சிபிஆர் என்னும் முதலுதவி செய்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி கொண்டிருந்த விஜய் படேல் சுருண்டு விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

The post கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: