ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் குறைவான விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியதாக மீனவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர, அவசரமாக வெட்டி எடுத்து கொண்டு கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 700-க்கும் அதிகமான படகுகள் உள்ள ராமேசுவரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு பயந்து குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

 

The post ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! appeared first on Dinakaran.

Related Stories: