ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து: 25 பேர் காயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரத்திலிருந்து முதுகளத்தூர் சென்ற அரசு பேருந்தும், ராமநாதபுரம் நோக்கி சென்ற 2 பேருந்துகளும் ஆலங்குளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் என சுமார் 25 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உத்திரகோசமங்கை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இத்தகைய 2 அரசு மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து: 25 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: