சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர் தொட்டிகள் இடம்பெறுகின்றன. இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.

The post சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: