திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. மூன்று நாள் விழாவின் முதல் தீபமாக ஏற்றப்படும் பரணி தீபம் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் கருவறை முன்பு ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைக் கண்டு பக்திப் பரவசத்தில் திளைக்கும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றது.