சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ சார்பில் ரூ.22 கோடியில் பல்வேறு கட்டிடங்கள்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

 

சென்னை: சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ சார்பில் ரூ.22 கோடியில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருவல்லிக்கேணி, ஜானி பாட்ஷா தெருவில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, திருப்பள்ளி தெரு பகுதியில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் 54 பயணிகள் அமரும் வசதி, 6 எண்ணிக்கையிலான குளிர்சாதன இயந்திரங்கள், குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ‘திருப்பள்ளி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்’, ஏழு கிணறு, வால்டாக்ஸ் சாலை சண்முகம் தெருவில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்’ ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பின்னர், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் 60 பயணிகள் அமரும் வசதி, குளிர்சாதன இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகயுடன் கட்டப்பட்டுள்ள கல்மண்டபம் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில், அகத்தியர் நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.5.08 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள அகத்தியர் நகர் விளையாட்டுத் திடலை திறந்து வைத்து பார்வையிட்டு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இனமானப் பேராசிரியர் அன்பழகனார் சமூக நலக்கூடத்தை திறந்து வைத்து, திருமண மண்டபம், உணவருந்தும் கூடம் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார்.
ஜானி பாட்ஷா தெரு முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமானது தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் புத்தக அலமாரிகள், 24 இருக்கை வசதிகளுடன் படிக்கும் பகுதி, 45 இருக்கை வசதிகளுடன் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: