வெள்ளியங்கிரி மலையேறியவர் பலி

 

கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை மீது ஏறி, அங்குள்ள சிவன் கோவிலில் வழிபட ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (47) என்பவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை மீது ஏறியுள்ளார். அவர் முதல் மலையில் உள்ள குரங்கு பாலம் அருகில் சென்றபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமை பணியாளர்களும் விரைந்தனர். இவர்கள், ஹரிதாசை மீட்டு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, ஹரிதாஸ் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த ஆண்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: