தவெகவுடன் கூட்டணி? பாஜ செய்தி தொடர்பாளர் பதவி காலி: நயினார் அதிரடி

 

தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பாஜ செய்தித் தொடர்பாளர் பதவியை நயினார் நாகேந்திரன் பறித்துள்ளார். தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பாஜ பல வழிகளிலும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தநிலையில், பாஜ மாநில செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ்.பிரசாத், நேற்று ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் தவெக, பாஜவுடன் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும். கூட்டணிக்கு வந்தால் தகுதியான இடங்கள் வழங்கப்படும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக பாஜ மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இப்போது முதல் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட, ஊடகத் துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: