பொருளாதாரத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில்,ஒன்றிய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்துவிட்டது. கார்ப்பரேட் வரிகளைக் குறைப்பது மற்றும் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் மீது வரிச் சுமையை உயர்த்துவது போன்ற அரசாங்கத்தின் உத்திகள் பெரிய நிறுவனங்களை வளப்படுத்த உதவியது. தேவையைத் தூண்டுவதற்கு, சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிக் குறைப்பும், ஏழைகளுக்கு வருமான ஆதரவும் தேவை. தனியார் துறை லாபம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் சம்பளம் தேக்க நிலையில் உள்ளது. துறைகள் முழுவதும் ஆண்டுதோறும் 0.8% மற்றும் 5.4% விகிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளன. மூலதனத்திற்கு லாபமாக செல்லும் வருமானத்தின் பங்கு மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியமாக செல்வதற்கு இடையே சிறந்த சமநிலை இருக்க வேண்டும்.2019 ம் ஆண்டில் கார்ப்பரேட் வரிகளை அரசாங்கம் குறைக்காமல் இருந்திருந்தால், அந்த சமநிலையை அடைந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

The post பொருளாதாரத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: