சென்னை: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள கப்பல்களில் உள்ள எல்பிஜி, ஒன்றரை நாளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. ஈரானுடன் இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற ஈரான் அனுமதி தந்துள்ளது. இதன்படி, 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள கப்பல்களில் உள்ள எல்பிஜி, ஒன்றரை நாளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்துள்ள இரண்டு எரிவாயு கப்பல்களில் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கு மேல், ஒட்டுமொத்தமாக 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி மட்டுமே வந்துள்ளது. இந்த 92,700 மெட்ரிக் டன் எரிவாயு, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒரு நாள் தேவையுடன் ஒப்பிடும்போது வெறும் 1.25 முதல் 1.6 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார்
