கோழிக்கோடு அருகே இன்று அதிகாலை பயங்கரம்: மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி 3 எம்பிபிஎஸ் மாணவர்கள் பலி

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மின்கம்பத்தில் மோதி ஓடையில் கவிழ்ந்து 3 எம்பிபிஎஸ் மாணவர்கள் இறந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டியில் மலபார் மருத்துவ கல்லூரி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த கல்லூரியில் படிக்கும் அபியான், நந்தகிஷோர், அபிநவ் ஆகிய 3 மாணவர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தங்களது விடுதிக்கு சென்று கொண்டிருந்தனர். குறவங்காடு பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி ஓடையில் கவிழ்ந்தது.

இந்த சத்தத்தை கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அறிந்த கொயிலாண்டி போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: