சர்வதேச பாரா தடகளம் பதக்கங்கள் வென்ற மாணவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

உசிலம்பட்டி, டிச. 9: தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில், சர்வதேச அளவிலான பாரா தடகள போட்டிகள் டிச.1 முதல் 7 வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் உசிலம்பட்டி அருகே வளையபட்டியை சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் சந்தானம் என்பரது மகனும், மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவருமான வருண் (22) உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 13 பேர் பங்கேற்றனர். இவர்களில் மாணவர் வருண், குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும், வட்டு எறிதலில் வெண்கல பதக்கமும் வென்றார்.

இதையடுத்து, இவரது பயிற்சியாளர் ரஞ்சித்குமாருடன் நாடு திரும்பினார். போட்டிகளில் பதக்கங்கள் வென்று சொந்த ஊர் திரும்பிய வருணுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பட்டாசு வெடித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்போட்டிகளில் பங்கேற்க மாணவர் வருணுக்கு, தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1.76 லட்சம் வழங்கி வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

The post சர்வதேச பாரா தடகளம் பதக்கங்கள் வென்ற மாணவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: