கோவை, நவ. 27: கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்துசெய்ய வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.எல்.எப். தொழிற்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில், திமுக தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், தொழிற்சங்க தலைவர்கள் ஆறுமுகம் (ஏஐடியுசி), தொமுச பேரவை செயலாளர் பெரியசாமி (எல்பிஎப்), கிருஷ்ணமூர்த்தி (சிஐடியு), சண்முகம் (எல்பிஎப்), ராஜாமணி (எச்எம்எஸ்) தங்கவேல் (ஏஐடியுசி), வணங்காமுடி (ஆட்டோ சங்கம்), கவுன்சில் தலைவர் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.