கோவை,மார்ச்9: கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிய கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன் (21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி (20) ஆகியோரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர்களை போலீசார் சுட்டுப்பிடித்து, கைது செய்தனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் 4 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த வடக்கு துணை கமிஷனர் தேவநாதன், சிங்காநல்லூர் சரக உதவி கமிஷனர் வேல்முருகன், பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார், லதா மற்றும் போலீசார் 2 பேரை கமிஷனர் கண்ணன் நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். மேலும், இந்த வழக்கை கையாண்ட 20க்கும் மேற்பட்ட போலீசாரை கமிஷனர் கண்ணன் சான்றிதழ் வழங்கி பாராட்ட உள்ளார்.
